புலம்பெயர்ந்து மீண்டும் திரும்பிய இளைஞர்களுக்கான

புலம்பெயர்ந்து மீண்டும் திரும்பிய இளைஞர்களுக்கான புதிய தொழில் தொடங்குவதற்கான நிதி

இத்திட்டத்தின் மூலம் பிற நாடுகள், பிற மாநிலங்கள் அல்லது பிற மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்து மீண்டும் திரும்பிய திறன்வாய்த்த இளைஞர்கள் ஒரு தொழில் முனைவோராகவோ அல்லது ஒரு புதிய நிறுவனத்தை தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவர். புதிய தொழில் துவக்குவதற்கான துவக்க நிதியினை வழங்குவதை இத்திட்டம் முக்கியப்படுத்துகிறது. பின்னர், அத்தகைய இளைஞர்கள் சேவை அல்லது சமுதாய திறன்வளர்ப்பு பயிற்சிப் பள்ளியில் பயிற்றுனராகவோ தொழில்நுட்ப சேவை வழங்கும் நிபுணர்களாகவோ இத்திட்டத்திற்கு பயன்பெறும் வகையில் பயன்படுத்தப்படுவர்.

ஆதரவின் விவரங்கள்:

இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் நிதி ஆதரவாக இருக்கும். திறமையான இளைஞர் புலம்பெயர்ந்தோர் திரும்பி வருபவருக்கு அதிகபட்சம் ரூ .1,00,000 / – வரை நிதி ஆதரவு கிடைக்கும். தற்போதுள்ள மற்றும் புதிய நிறுவனங்கள் குறிப்பாக, நானோ மற்றும் மைக்ரோ நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

பயனாளிகள் மற்றும் இலக்குகளின் மதிப்பீடுகள்

மாவட்டங்கள்

ஒரு மாவட்டத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கை (சராசரி)

புலம்பெயர்ந்து மீண்டும் திரும்பிய இளைஞர்கள் பயனடையவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நபர் ஒருவருக்கு அதிகபட்ச கடன் உதவி

கோடிகள் - மொத்த மதிப்பீட்டு பட்ஜெட்

தேவையான ஆவணங்கள்

  • ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை
  • வயது சான்று அல்லது அடையாள அட்டை
  • கல்விச் சான்றிதழ் (இருக்கும் பட்சத்தில் )
  • பணி அனுபவத்தின் சான்றிதழ்
  • செயல்பாட்டு திட்டம்
  • வங்கி பாஸ் புக் – நகல்
  • செயல்பாட்டு திட்டம் தொடர்பான திறன் பயிற்சி சான்றிதழ் (இருக்கும் பட்சத்தில்)
  • பாஸ்போர்ட் நகல் (வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு மட்டும்)