சமுதாயத் திறன் பள்ளி

சமுதாயத் திறன் பள்ளி

தொழில்வாய்ப்பு / வேலைவாய்ப்புத் திறன்களின் கட்டாயத்தை உணர்ந்து, சமுதாய திறன் பள்ளிகள் (CSS), தன் முன்னோக்கு (initiative)  திட்டத்தின் மூலம், திறன் இடைவெளியைக் குறைக்கிறது. இந்த முன்னோக்குத் திட்டம், ஊரக (கிராம) இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு, கற்றலுக்கேற்ற சூழலை ஏற்படுத்தி, வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. பொதுவான தொழில்களுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட தொழில்வாய்ப்புகளுக்கு அவர்களை வழிநடத்துகிறது.    

காலாகாலமாக ஆண்களால் செய்யப்பட்டு வரும் தொழில்களை, ஊரக மகளிரை (கிராமப் பெண்களை) வாழ்க்கைத் தொழிலாகப் பொறுப்பேற்றுச் செய்திட சமுதாயப் பண்ணைப் பள்ளி (CSS) வழிநடத்துகிறது.

சமுதாயத் திறன் பள்ளி, ஒரு தனித்தகு வர்த்தகம்புரிய, தனிநபரை தயார்படுத்துகிறது. ஊரக சமூகங்கள் தற்சார்புடன் வாழ்ந்திடும் வகையில் மேம்படுத்துகிறது. மக்கள் தங்கள் திறமைகள் மற்றும் மனப்பாங்குக்குப் பொருத்தமான வேலையை / தொழிலைக் கண்டறியும் வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது. வுரவமான தொழில் (வேலை) செய்து, நியாயமான வருமானம் பெற வழிகாட்டுகிறது. சமூகங்கள் வறுமைப் பிடியிலிருந்து விடுபட்டு, வாழ்க்கையின் முன்னேறுவதற்கான திறன்களைப் பயிற்றுவிக்கிறது.

பயனாளர்கள்

உருவாக்கப்பட்ட தொழிற்குழுக்கள்

சமுதாயத் திறன் பள்ளியானது, உள்ளூர் எல்லையிலுள்ள பயிற்சியாளர்களை ஏற்படுத்தி, நட்புச்சூழலுடன் பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும், தனிநபரின் வேலைதேடும் திறனை, ஊதியம், சுய வேலைவாய்ப்பு, வேலைத்திறன் மற்றும் தொழில்நுட்பங்களுக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளுதல் மற்றும் சந்தைத் தேவைகளுக்கேற்ப மாறிக்கொள்ளுதல் ஆகிய திறன்களை வளர்த்திட வழிகாட்டுகிறது

 பயிற்சி பெறுவோருக்கு, நுண், குறு மற்றும் சிறு நிறுவனங்களைத் தொடங்குவதற்கு, சமுதாயத் திறன் பள்ளி (CSS) வாய்ப்பு வழங்கி வழிநடத்துகிறது.    

 NSDC துணையுடன், DDS, PGP, VCA, மாநில () மாவட்ட அளவில், திறன் இடைவெளி ஆய்வு நடத்தி, சமுதாயத்தினருக்கு வேண்டிய, மற்றும் வேலைவாய்ப்பு () சுய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் முதன்மைத் தொழில் துறைகள், துணைத் தொழில் துறைகள் மற்றும் வர்த்தகங்களைக் கண்டறிதல்.   

தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் வர்த்தகங்களில் சமுதாய வல்லுநர்களை அடையாளம் காணுதல்; வல்லுநர்கள் / முகவர்களை ஊக்கப்படுத்தி, சிறந்த பயிற்சியாளராக அவர்களை மேம்படுத்தி, திறன் பயிற்சிகள் நடத்தும் வகையில் வாய்ப்பளித்தல். 

  • சமுதாய – நிர்வாகத் திறன்களை வளர்க்கும் வகையில், சமுதாயத்தினருக்கும், அதன் வல்லுநர்களுக்கும் வாய்ப்பளித்தல்.
  • சட்ட ஒப்புதல் பெறப்பட்டு, வளர்ந்து வரும் முகமைகளை மதிப்பீடு செய்து, சான்றிதழ் வழங்குவதற்கான அமைப்புகளை ஏற்படுத்தி, வேலைச் சந்தையை அணுக வைத்தல்.
  • ஆர்வமுள்ள உறுப்பினர்களை ‘மதி சிறகுகள்தொழில் மையத்தில் இணைப்பதன் மூலம், தொழில்முனைவோர் ஆக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துதல்.

கொத்தனார் வேலை, கம்பிக் கட்டுதல், தண்ணீர் குழாய் பதித்தல், மின் இணைப்புப் பணி, பற்றாசு (வெல்டிங்) முதலிய கட்டுமானத் தொழில்களில், சமுதாயத் திறன் பள்ளி வழியாக திறன் வளர்ப்பு எளிதில் செய்யப்படுகிறது. மேலும் 2 / 4 சக்கர ஊர்தி பொறிவேலை, வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைச் செப்பனிடுதல், அலைபேசி செப்பனிடுதல் முதலிய தொழிற்பயிற்சிகளும் இதன் மூலம் சிறப்பாக வழங்கப்படுகிறது.

சமுதாயத் திறன் பள்ளியில் பயன்பெறும் தொழில் வர்த்தகங்கள் பின்வரும் அடிப்படையில் பட்டியலிடப்படுகின்றன:

  • மாவட்ட அளவில் அடையாளம் காணப்பட்ட தொழில்வாய்ப்புப் பகுதிகள்.
  • மாவட்ட கண்டறியும் ஆய்வு (DDS), மதிப்புச் சங்கிலி ஆய்வுகள், மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டம் (PGP) செயல்முறை மற்றும் தொழில்நிறுவனக் கூட்டங்கள் (உள்ளூர் நிறுவனங்கள் உட்பட).
  • FGD-கள், ஊரக நிறுவன ஆய்வு, தொழிற்சார் சமூக வல்லுநர்கள் (ECP) –களுடன் கலந்துரையாடல் முதலியன.

நீங்கள் பயிற்சி பெறுபவரா? பயிற்சி கொடுப்பவரா? – பதிவு செய்வது எப்படி?

உங்கள் ஊரிலுள்ள (கிராமத்திலுள்ள) தொழில்சார் சமூக வல்லுநரைத் தொடர்பு கொள்ளுங்கள்

அல்லது

உங்களது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை அணுகி, தேவைப்படும் விவரங்களுடன் உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யுங்கள்.

நீங்கள் திறன் பயிற்சி பெற விரும்பினால், https://idp.tnrtp.org/auth/user/login இல் உள்நுழைந்து, ஒரு கணக்கைத் தொடங்கி, இளைஞர் தகவல் தளத்தில் பதிவு செய்யலாம்.

சமுதாயத் திறன் பள்ளியில் கொடுக்கப்படும் சில முதன்மைத் தொழிற் பயிற்சிகள்:

  1. தையல் பயிற்சி & ஆரி பூந்தையல் பயிற்சி
  2. கைவினைப் பொருட்கள் செய்தல்
  3. கொத்தனார் வேலை, காங்கிரீட் வேலைகள்
  4. உணவுப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல்
  5. மின் இணைப்பு வேலை
  6. இரு சக்கர ஊர்தி பழுதுநீக்குதல்
  7. சணல் பொருட்கள் செய்தல்
  8. காளான் வளர்ப்பு

இவை தவிர்த்து வழங்கப்படும் அனைத்து தொழிற்பயிற்சிகளின் முழுமையான பட்டியலை,  பதிவிறக்கம் செய்து காணலாம். 

Click to get the Details of the
Community Skill School

Community Skill School

Project Guidlines