புதுமைத் தொழில் ஊக்குவித்தல்

புதுமைத் தொழில்களை ஊக்குவித்தல்

புதுமைத் தொழில்களை ஊக்குவித்தல் என்பது, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் தொழில் திட்ட நிதியுதவிப் பகுதியின் ஒரு துணைக் கூறாகும். இதன் பொருள் என்னவெனில், மாநிலத்தின் வளர்ச்சிச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்பு, கூட்டாண்மை – முதலியவற்றைப் பயன்படுத்தி புத்தாக்கம் மற்றும் புதுமையான யோசனை, வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் பங்களிப்பதாகும்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம், புத்தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய யோசனைக்காகக் காண்கிறது. இந்த மாற்றமானது சிறந்த தொழில் நடைமுறைகள், செயல்திறனை அதிகரித்தல், புதிய உற்பத்தி மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட பயிரிடுதல் சுழற்சி, GHGs மற்றும் கசடுகளைக் குறைத்தல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கலாம். இத்தகைய புத்தெண்ணங்களும் தீர்வுகளும், புதிய தொழில் / வேலை வாய்ப்புகள், புதிய விற்பனைச் சந்தைகள் மற்றும் உள்ளூர் செல்வ வளம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இந்த திட்டம் பின்வரும் வகையில் புத்தாக்கத்தை எதிர்நோக்குகிறது:

  • இந்த செயல்முறையில், புதிய யோசனைகள், அணுகுமுறைகள், செயல்முறைகள், நடைமுறைகள், வழிமுறைகள், தொழில்நுட்பங்கள் அல்லது நுட்பங்கள் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படுகின்றன.
  • பின்வரும் அம்சங்களைக் கொண்ட தனித்துவமான அணுகுமுறைகள், செயல்முறைகள், நடைமுறைகள்.
  • பொருந்தும் தன்மை (ஊரக வாழ்க்கைச் சூழலுக்கேற்ப பொருந்தும் புத்தாக்கம்)
  • பின்பற்றுதல் (மற்ற இடங்களில் நிரூபிக்கப்பட்ட வெற்றிமுறைகளை அப்படியே கடைப்பிடித்தல்).
  • அளவிடுதல் (நிலப்பரப்பு மற்றும் மனிதர்களின் எண்ணிக்கைக்கேற்ப கணக்கிடப்படுகிறது).
  • நிலைத்தன்மை (வெளிப்புற ஆதரவு இல்லாமலே நீடித்து நிலைத்திருப்பது).
  • தாக்கம் மற்றும் நன்மைகள் (சமூகம், செல்வவளம் மற்றும் சுற்றுச்சூழல் பயன்களின் அடிப்படையில், நீண்டகால நன்மைகளைத் தருவது).

வேளாண்மை, உணவு நிறுவனங்கள், பசுமைத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நோக்கத்தைக் கொண்ட பகுதிகளில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தால் ஆதரிக்கப்படும் தனிநபர் நிறுவனங்கள், குழு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு, இந்த துணைப் பிரிவு, தொழிநுட்ப வகையிலும், நிதி வகையிலும் துணை செய்கிறது.