இடம்பெயர்வோர் ஆதரவு மையங்கள் (MSCs)

இடம்பெயர்வோர் ஆதரவு மையங்கள் (MSCs)

இடம்பெயர்வோர் ஆதரவு மையங்கள் (MSCs), சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடி பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கான  நேரடிச் சேவைபுரியும் வள மையங்களாகச் செயல்படுகின்றன. இந்த இடம்பெயர்வோர் ஆதரவு மையங்கள் பின்வரும் சேவைகளை வழங்குகின்றன:

    • ஆலோசனை
    • தகவலை அணுகிப் பெறும் வாய்ப்பு
    • புதிய சூழலை எதிர்கொள்ள வழிகாட்டுதல்
    • பேரிடரை எதிர்கொள்ளும் இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு இலக்குச் சேவைகளை வழங்குதல்.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளோட்டம் அடிப்படையில், தொடங்கப்பட்ட ஒரு இடம்பெயர்ந்தோர் ஆதரவு மையம், 40 படுக்கைகளைக் கொண்டு செயல்படுகிறது. மேலும் திறன் பயிற்சி நிலையங்கள், சமூகம் சார்ந்த அமைப்புகள், தொழிற்சங்கங்கள் முதலியவற்றுடன் இணைந்து புலம் பெயர்ந்தோர் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சேவைகளைப் பெற: இங்கு கிளிக் செய்யவும்