இணை மானிய நிதித் திட்டம்

இணை மானிய நிதித் திட்டம்

இணை மானிய நிதித் திட்டம் (MGP) என்பது, ஊரக நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் ஏற்படும் தேவை மற்றும் அளிப்பு இடைவெளியை நிரப்ப உருவாக்கப்பட்ட ஒரு நிதி முறையாகும். கூட்டாண்மை நிதி நிறுவனங்களிடமிருந்து வாங்கிய கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தும் தொழில்முனைவோரை ஊக்குவிக்க, இந்த இணை மானிய நிதித் திட்டம் (MGP) உதவும்.

பயனாளர்கள்

எடுத்துக்காட்டு:

  • கூட்டாண்மை நிதி நிறுவனத்தால் விடுவிக்கப்படும் கடனுதவி: ரூ. 1,00,000
  • இக்கடனைத் திருப்பிச் செலுத்தும் போது
  • கடனுதவியில் 70% (ரூ. 70,000) – கடன் தொகையாக கருதப்படுகிறது.
  • மீதி 30% (ரூ. 30,000) – திட்டத்தின் மானிய பங்களிப்பாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

நோக்கங்கள்

  • ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் நிதியுதவி மற்றும் தொழில் / வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
  • தொழிற்குழுக்கள், உற்பத்தியாளர் நிறுவனங்கள், புதிதாக (முதன்முதலில்) தொழில்முனைவோர், மகளிரால் நடத்தப்படும் தொழில்கள் மற்றும் முதன்மை நிதி நிறுவனங்களால் அதிக இடருள்ள (நெருக்கடியான) நிறுவனங்களாகக் கருதப்படும் பிற நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதில் உள்ள தேவை அளிப்புஇடைவெளியைக் களைதல்
  • இணை மானிய நிதித் திட்டம் மூலம், கடன்பெற்றவர்களிடையே, கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒழுங்கை வளர்க்கும் வகையில், வலுவான நிதியளிப்புப் பொறிமுறையை எளிதாக்குதல்
  • நிறுவனங்கள் நீடித்துச் செயல்படுவதற்கான நோக்கத்தை மேம்படுத்துதல்
  • முதன்மை நிதி நிறுவனங்களுக்கு செயலூக்கமாய் பங்கேற்பளித்து, சரியான நேரத்தில் கடனுதவியை வழங்குவதையும் / நீட்டிப்பதையும் ஊக்குவித்தல்

Operative Guideline