உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்

உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்

உற்பத்தியாளர் கூட்டமைப்பு (PC) என்பது, பொதுவான உற்பத்தி நோக்கத்திற்காக ஒன்றிணைந்த தனிநபர் உற்பத்தியாளர்களின் நிறுவனம் ஆகும். இந்த உற்பத்தியாளர் நிறுவனம் தகவல் போக்குவரத்தை எளிதாக்குகிறது, கூட்டாகச் செயல்பட வைக்கிறது, உள்ளூர் கட்டமைப்பிற்கான தொழில் மற்றும் அமைப்பைச் செயல்படுத்துகிறது. இது உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பின்வரும் வகையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்பு ஆகும், அவை:

கூட்டமைப்புகள்

பயனாளர்கள்

ஒன்றுதிரட்டுதல்

மதிப்பு கூட்டுதல்

விற்பனைச் சந்தைப்படுத்துதல்

பொருள்வள அளவீடு

பொதுவாக இதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 300 முதல் 3000 உற்பத்தியாளர்களைக் கொண்டதாக இருக்கும் (அரிதான பொருட்கள் மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பழங்குடியினர் பகுதிகளில் 150 முதல் 300 உற்பத்தியாளர்கள் இருக்கலாம். அனைத்து உற்பத்தியாளர் நிறுவனங்களும் நிறுவனங்கள் சட்டம், 2013 –ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளை எட்டிய பிறகு, தொழில்முனைவு (தொடக்க) நிதியாக ரூ. 30 லட்சம் வரை, நான்கு தவணைகளில் விடுவிக்கப்பட ஒப்புதல் வழங்கப்படுகிறது.