வேலைவாய்ப்புப் பயன்களை அதிகரித்தல்
வேலைவாய்ப்புப் பயன்களை அதிகரித்தல்
இந்த துணைப் பிரிவானது, அரசு ஒப்புதல் பெற்ற தற்போதைய திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டங்கள் வழியாக, பயிற்சி வழங்குவதன் மூலம், நலிவுற்ற (ஏழை) குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான சேவைகள் மற்றும் வேலைவாய்ப்புப் பயன்களை அணுகிப் பெறுவதை எளிதாக்குகிறது.
இந்த துணைப் பிரிவு பின்வரும் சேவை வழங்கலை உறுதிப்படுத்துகிறது:
- இலக்கு இளைஞர்களை அடையாளம் கண்டு, ஒன்றுதிரட்டுதல் உட்பட, பயிற்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய சேவைகள்.
- பயிற்சி வகைகள் மற்றும் பயிற்சி அட்டவணைகள் பற்றிய தகவல் தொகுப்புகளை மேம்படுத்துதல்.
- கிடைக்கும் தகவல்களைப் புரிந்துகொள்ள வழிகாட்டும் வகையில், நலிவுற்ற இளைஞர்களுக்கு பயிற்சிக்கு முந்தைய ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
- பொருத்தமான பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டுதல்.
- ஆலோசனை, அவசர உதவி மற்றும் அடிப்படைச் சேவைகளை அணுகும் வாய்ப்பை எளிதாக்குவது உட்பட, இலக்குப் பகுதிகளில், பயிற்சிக்குப் பிந்தைய மற்றும் நேரடி வழிநடத்துதல் சேவைகளை (hand-holding services) வழங்குதல்