இணை உருவாக்க மையம்
இணை உருவாக்க மையம்
தொழில்முனைவு, ஊரக மகளிரின் செல்வ வளத்தைப் பெருக்குவதற்கு, ஓர் ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. மகளிர் தொழில்முனைவோரைப் பொறுத்தவரை, நிதியுதவி பெறுதல், விற்பனைச் சந்தை இணைப்பைப் பெறுதல், தகவல்வலை இணைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை அணுகுவதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பாலியல் பாகுபாடு அவர்களின் நிறுவன வளர்ச்சியையும், நீடித்து செயல்படுவதற்கும் தடைக்கல்லாக அமைகிறது. மகளிர் தொழில்முனைவோர், சவால்களைக் கையாளுவதில், ஊரக மகளிர் – நகர்ப்புற மகளிர், இருவரிடையேயும் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. நகர்ப்புற மகளிரை ஒப்பிட, ஊரக மகளிர் இரு மடங்கு பின்தங்கிய நிலையில் உள்ளனர். அதனால்தான் இத்திட்டமானது, மாநில அளவில் இணை உருவாக்க மையத்தை (Co – Creation Center) உருவாக்கி வருகிறது.
இணை உருவாக்க மையம், ஆர்வமுள்ள மகளிர் தொழில்முனைவோரை மேம்படுத்தும் பின்வரும் வாய்ப்புகளை வழங்குகிறது:
- மகளிரின் தொழில்நிலையை சிந்தித்தல்.
- தொழில் நிறுவனங்களை விரிவாக்குதல்.
- அவர்களின் தொழிலை திறம்பட கையாளுவதற்காக செயல்திறன்களையும், செயலூக்கத்தையும் மேம்படுத்துதல்.
- தொழில்முனைவு / மேம்பாட்டில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணுதல்.
- தொழில்முனைவில் பாலியல் சமத்துவத்தை நிலைநாட்டுதல்.
- தகவல்வலை இணைப்புகளை உருவாக்குதல், மற்றும்
- நிறுவன வரம்பிற்கேற்ப நிதியுதவி மற்றும் விற்பனைச் சந்தை இணைப்புகளை உறுதிப்படுத்துதல்.