சமுதாயப் பண்ணைப் பள்ளி
சமுதாயப் பண்ணைப் பள்ளி CFS
சமுதாயப் பண்ணைப் பள்ளியானது, வேளாண் – சூழல் செயல்முறைகள், மேம்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல் – ஆகியவை வழியாக, வேளாண் சார்ந்த, வாழ்க்கைத் தொழிலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சமுதாயப் பண்ணைப் பள்ளி என்படு, ஒவ்வொருவரும் பங்கேற்று, கூட்டாக இணைந்து கற்றலுக்கான புதுமையான அணுகுமுறை; இது உழவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், சவால்களை எதிர்கொண்டு, கூட்டாக இணைந்து கற்பதில் கவனம் செலுத்துகிறது.
பயனாளர்கள்
உருவாக்கப்பட்ட தொழிற்குழுக்கள்
சமுதாயப் பண்ணைப் பள்ளி பின்வரும் வாய்ப்புகளை வழங்குகிறது:
- தங்களுடைய உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்தல்.
- வேளாண்மை மற்றும் வேளாண்-சார் துறைகளிலும் தங்களுடைய சிக்கல்களுக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிதல்.
- பொருத்தமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தங்களுடைய சிக்கல்களுக்கு கூட்டுத் தீர்வைக் கண்டறிதல்.
- வேளாண்மை மற்றும் வேளாண்மை தொடர்பான தொழில்களில் எதிர்பார்க்கும் விளைச்சலை / பயன்களைப் பெறுதல்.
- வேளாண்மை தொடர்பான தொழில்களில், தடைக்கல்லாக அமையும் திறன் இடைவெளிகளைக் கண்டறிதல்.
- இத்தகைய இடைவெளிகளை தகுந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு பகுப்பாய்வு செய்து, பொருத்தமான தொழில்நுட்ப தீர்வுகளைப் பரிந்துரைத்தல்.
- முன்னோடி விவசாயிகளைக் கண்டறிந்து, உரிய பயிற்சி வழங்கி, சமுதாயத்தினருக்குப் பயிற்சியளிக்க வழிநடத்துதல்.
சமுதாயப் பண்ணைப் பள்ளியில் (CFS) பதிவு செய்வது எப்படி?
(அல்லது)
முன்னோடி விவசாயியாக (SPARK) மேம்படுவது எப்படி?
உங்கள் ஊரிலுள்ள (கிராமத்திலுள்ள) தொழில்சார் சமூக வல்லுநரைத் தொடர்பு கொள்ளுங்கள்
அல்லது
உங்களது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை அணுகி, தேவைப்படும் விவரங்களுடன் உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யுங்கள்.
நீங்கள் பண்ணைப் பயிற்சி பெற விரும்பினால், https://idp.tnrtp.org/auth/user/login இல் உள்நுழைந்து, ஒரு கணக்கைத் தொடங்கி, பண்ணைத் தகவல் தளத்தில் பதிவு செய்யலாம்.
சமுதாயப் பண்ணைப் பள்ளியில் கொடுக்கப்படும் சில முதன்மை வேளாண் பயிற்சிகள்:
- பால் பண்ணைப் பயிற்சி
- (எள்)நெய் வித்துப் பயிரிடுதல்
- பருப்பு வகைகள் பயிரிடுதல்
- ஆடு வளர்ப்புப் பயிற்சி
- காய்கனிகள் பயிரிடுதல்
- தினைப் பயிர்கள்
- வாழைப் பயிரிடுதல்
- பணப் பயிர்கள்
இவை தவிர்த்து வழங்கப்படும் அனைத்து வேளாண் (பண்ணை) பயிற்சிகளின் முழுமையான பட்டியலை, பதிவிறக்கம் செய்து காணலாம்.
Click to get the Details of the Community Farm School |