தனிநபர் தொழில்முனைவோர்

தனிநபர் தொழில்முனைவோர்

கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு, இணை மானிய நிதித் திட்டம் (MGP) மற்றும் மதி சிறகுகள் தொழில் மையங்கள் மூலம், தனிநபர் தொழில் நிறுவனங்கள், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்குவதற்கான ஆதரவை இத்திட்டம் வழங்குகிறது.

பயனாளர்கள் – மொத்தம்

நுண் தொழில் நிறுவன நிதித் திட்டம் (NEFF)

நுண் தொழில் நிறுவன நிதித் திட்டமானது, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLFs) மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் (VPRC) ஆகியவற்றின் எல்லை வரம்பிற்குள், தொகையைத் திரும்பச் செலுத்தும் (repayment), புதிய மற்றும் ஏற்கனவே செயல்படும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் தொலைநோக்குடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் (VPRC) ஆகியவற்றில் உள்ள கடன் திருப்பம் (repayment), ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் (PLF) கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டு, நுண் தொழில் நிறுவன நிதித் திட்டம் (NEFF) என அழைக்கப்படுகிறது. இது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பால் நிர்வகிக்கப்பட்டு, சுய உதவிக் குழு (SHG) / குடும்பங்களில் உள்ள தொழில்முனைவோரால் நடத்தப்படும் தற்போதைய மற்றும் புதிய தனிநபர் நிறுவனங்களுக்கு ஆதரவாக, நிலையான தொழிற்சூழலை உருவாக்கும் வகையில் கிடைக்கிறது.

முன்னறிவிக்கப்பட்ட நுண் நிறுவன நிதித் திட்டமானது (NEFF) தற்போதுள்ள PLF மற்றும் VPRC செயல்முறையின் படியே, தொழில்முனைவோர் தேர்வு, தொழில் மதிப்பீடு, ஆவணம் மற்றும் நிதியை விடுவித்தல் – என, கடன் வழங்கும் செயல்பாடுகளைப் பின்பற்றும்.