மதி சிறகுகள் – தொழில் மையம்

மதி சிறகுகள் – தொழில் மையம்

மதி சிறகுகள் – தொழில் மையமானது (OSF) தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு, தொழில் மேம்பாட்டு உறுதுணை சேவைகளை வழங்குகிறது. இதுபோன்று ஓரிடத்தில் அணுகிப் பெறும் தீர்வுகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் புதிதாக நுழையும் தொழில்முனைவோர்களுக்கு நுழைவுத் தடைகள் மற்றும் இடையூறுகளைக் கடக்க உதவுகிறது. இந்த மதி சிறகுகள் – தொழில் மையமானது, பின்வருமாறு ஊரக (கிராம) தொழில்நிறுவனங்கள் / தொழில்முனைவோருக்கு., தொழில் வளர்ச்சி உறுதுணை சேவைகளை வழங்குகிறது.
  • தொழில் புத்தெண்ணம் மற்றும் கருத்துருவை ஆக்குதல்.
  • தொழில் திட்டத்தைத் தயாரித்து, மதிப்பீடு செய்தல்.
  • தொழிலைத் தொடங்க, நேரடியாக வழிநடத்துதல்.
  • தேவைப்படும் நிதியுதவி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களை அணுகிப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குதல்.
  • சட்டதிட்டங்களுக்கு இணங்கிச் செயல்படுதல்.
  • விற்பனைச் சந்தை அறிவு / தகவல் மற்றும் இணைப்புகள்.
  • கண்காணித்தல்
  • வழிகாட்டுதல்

மதி சிறகுகள் (OSF) – செயல்படுத்துபவர்கள்

நிறுவன மேம்பாட்டு அலுவலர் நிறுவன நிதி அலுவலர் நிறுவன சமூக வல்லுநர்கள்
தொழில் நிறுவனத்தை ஊக்கப்படுத்தி, மேம்படுத்த வாய்ப்பளித்தல் தொழில்முனைவோருக்கு, பொருத்தமான, வங்கி வரைமுறைகளுக்கேற்ற தொழில் திட்டங்களைத் தயாரித்தல்  வட்டாரப் பணியாளர்களுடன் இணைந்து, தனிநபர் மற்றும் குழு நிறுவனங்களை அடையாளம் கண்டு, அணிதிரட்டுதல்.

 

வழங்கப்படும் சேவைகள்

தொழில் வளர்ச்சி

  • தொழில்முனைவோரைக் கண்டறிந்து தேர்ந்தெடுத்தல்.
  • புத்தாக்கத் தொழில்கள்.
  • தொழில் திட்டம் தயாரித்தல்.

வாய்ப்பு வழங்குதல்

  • தொழில்முனைவோர் செயல்படத் தொடங்குவதற்கு உறுதுணை செய்தல்.
  • நிதியுதவியை அணுக வாய்ப்பளித்தல்.
  • வழிகாட்டுதல்.
  • செயல்பாட்டு வல்லுநர்களின் ஆலோசனை.
  • வழிகாட்டல் / செயல்பாட்டு வல்லுநர்களைக் கொண்டு தொழில் திட்டங்களை மதிப்பிடுதல்.

தகவல் இணைப்பு

  • விற்பனைச் சந்தைக்கு இணைப்பு ஏற்படுத்துதல்.
  • தொழில் தளவாடங்களை பயன்படுத்தும் வாய்ப்பு.
  • துறைசார் வளர்ச்சியை ஏற்படுத்துதல்.
  • திறன் பயிற்சி வழங்குதல்.
  • தொழில் பட்டறை
  • வல்லுநர்களின் ஆலோசனை

மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்

  • நிலையான கணக்கு எண் (PAN) அட்டை.
  • சரக்கு சேவை வரி (GST) தாக்கல் செய்தல்.
  • உத்யம் (UDYAM).
  • இணையவழி செயல்பட வைத்தல் (Online compliance).
  • உரிமம் பெறுதல்.
  • சான்று / சான்றிதழ்கள் பெறுதல்.
  • தணிக்கை.
  • வரி வருமானம்.
  • கணக்குப் பதிவு (Accounting)
வ. எண் சட்டதிட்டங்களுக்கு உட்படுதல் / நெறிமுறைகள் / வர்த்தகச் சேவைகள் வழங்கப்பட்ட சேவைகள் – மொத்தம்
1 உத்யம் (Udyam) பதிவு முறைகள் 5307
2 நிலையான கணக்கு எண் (PAN) அட்டை 405
3 FSSAI 481
4 இணை மானிய நிதித் திட்டத்திற்கான (MGP) தொழில் திட்டங்கள் 3987
5 ஒருங்கிணைந்த திட்டங்களுக்கான தொழில் திட்டங்கள் 1089

*எண்ணிக்கைகள் மாதம் இருமுறை புதுப்பிக்கப்படும்.

மதி சிறகுகள் – தொழில் மையம் விலை அட்டை

42 மதி சிறகுகள்

முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்

மதி சிறகுகள் தொழில் மையம்

திட்ட வழிகாட்டிகள்