தனியுரிமைக் கொள்கை
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இணையதளத்திற்கான தனியுரிமைக் கொள்கை
இந்த தனியுரிமைக் கொள்கை, நீங்கள் சேவையைப் பயன்படுத்தும் வேளைகளில் உங்கள் தகவலைச் சேகரிப்பது, பயன்படுத்துவது மற்றும் வெளிப்படுத்துவது பற்றிய எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை விவரிக்கிறது; மேலும் உங்கள் தனியுரிமை உரிமைகளும் சட்டங்களும் உங்களை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைப் பற்றி விளக்குகிறது. நாங்கள் சேவைகளை வழங்கவும், மேம்படுத்தவும் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த சேவையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கையின் படி, தகவல்களைச் சேகரிக்கவும் மற்றும் பயன்படுத்தவும் ஒப்புக் கொள்கிறீர்கள்.
விளக்கம் மற்றும் வரையறைகள்:
விளக்கம்
இங்கு, தலைப்பு எழுத்துகளில் (capitalized) தொடங்கும் சொற்கள், பின்வரும் வரையறைகளின்படி, வரையறுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளன. பின்வரும் வரையறைகள், ஒருமையில் அல்லது பன்மையில் (singular or plural) இருந்தாலும் இவை ஒரே பொருளையே கொண்டிருக்கும்.
வரையறைகள்
இந்த தனியுரிமைக் கொள்கையின் நோக்கங்களுக்காக:
- கணக்கு: எங்கள் சேவைகள் மற்றும் சேவைப் பகுதிகளை அணுகும் வகையில், வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட தகவல் பதிவே, ‘கணக்கு’ ஆகும்.
- நிறுவனம்: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் (இந்த ஒப்பந்தத்தில், எங்கள் நிறுவனத்தின் பெயர், “நாங்கள்”, “எங்களை” அல்லது “நமது” என குறிப்பிடப்படுகிறது) முகவரி: வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 5வது தளம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட், திருவிக தொழிற்பேட்டை, சென்னை – 600032.
- விரைவிகள் (Cookies): விரைவிகள் என்பது, உங்கள் கணினி, கைப்பேசிக் கருவி அல்லது வேறு எந்த கருவியிலும் இணையதளங்கள் மூலம் வைக்கப்படும் சிறிய நிரல் கோப்புகளாகும். இந்த விரைவிகளில், நீங்கள் உலாவிய இணையதளங்கள், தேடிய பொருட்கள் – முதலிய உலாவல் விவரங்கள் மறைகுறியாக ஆக்கப்பட்டு, சேமிக்கப்பட்டிருக்கும்.
- நாடு: தமிழ்நாடு, இந்தியா – எனக் குறிப்பிடப்படுகிறது.
- கருவி: இந்த சேவையை அணுகப் பயன்படுத்தப்படும் கணினி, கைப்பேசி அல்லது மின்னணு டேப்லட் போன்ற எந்தவொரு கருவியையும் குறிக்கிறது.
- தனிப்பட்ட தரவு: தனிப்பட்ட தரவு என்பது, அடையாளம் காணக்கூடிய அல்லது அடையாளம் காணக்கூடிய நபருடன் தொடர்புடைய எந்த தகவலையும் குறிக்கிறது.
- சேவை: சேவை என்பது இணையதளத்தைக் குறிப்பிடுகிறது.
- சேவை வழங்குநர்: நிறுவனம் சார்பாக, தகவல்களை முறையாக வழங்கும் (செயல்படுத்தும்), இயல்பான அல்லது சட்டப்படி செயல்படுத்துபவர், சேவை வழங்குநர் என குறிப்பிடப்படுகிறார். சேவைகளைக் கிடைக்கச் செய்யவும், நிறுவனம் சார்பாக சேவைகளை வழங்கவும், பணிகள் தொடர்பான சேவைகளைச் செய்யவும் அல்லது சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பகுப்பாய்வு செய்வதில் நிறுவனத்திற்கு துணைபுரிந்து வரும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் அல்லது நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட தனிநபர்களை இது குறிப்பிடுகிறது.
- வெளியார் (Thirt Party) சமூக ஊடகச் சேவை: பயனாளர்கள் இணையத்தில் பதிவுசெய்து, ஒரு கணக்கைத் தொடங்கி, இந்த சேவையைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கும் ஏதாவது இணையதளம் அல்லது சமூக வலை தளத்தைக், குறிப்பிடுவதே வெளியார் அல்லது மூன்றாம் தரப்பு (Thirt Party) சமூக ஊடகச் சேவை ஆகும்.
- பயன்பாட்டுத் தரவு: சேவையைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது சேவை உள்கட்டமைப்பிலிருந்தோ, (எடுத்துக்காட்டாக , ஒரு பக்கத்தைப் பார்வையிடும் நேரம்) தானாக சேகரிக்கப்பட்ட தரவைக் குறிப்பதே, பயன்பாட்டுத் தரவு.
- இணையதளம்: https://www.vkp-tnrtp.org மூலம் அணுகக் கூடிய, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இணையதளத்தைக் குறிப்பிடுகிறது.
- நீங்கள்: நீங்கள் என்பது, சேவையை அணுகும் அல்லது பயன்படுத்தும் நபர், அல்லது தனது நிறுவனம் அல்லது பிற சட்டப்பூர்வ அமைப்பு சார்பாக, இந்த நபர் (நீங்கள்) சேவையை அணுகுகிறார் அல்லது பயன்படுத்துகிறார்.
உங்கள் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து பயன்படுத்துதல்:
சேகரிக்கப்பட்ட தரவுகளின் வகைகள்:
தனிப்பட்ட தகவல்:
எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் நேரத்தில், உங்களைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அடையாளம் காணவும் பயன்படுத்தும் வகையில், உங்களின் தனிப்பட்ட அடையாள விவரங்களை எங்களுக்கு வழங்கும்படி, நாங்கள் உங்களைக் கேட்கலாம். பின்வருமாறு தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்கள் உள்ளடக்கியிருக்கும். இவற்றைத் தவிர, மேலும் சில தகவல்கள் தேவைப்படலாம்:
- மின்னஞ்சல் முகவரி
- முதல் பெயர் மற்றும் கடைசிப் பெயர்
- தொலைபேசி எண்
- முகவரி, மாநிலம், மாவட்டம், அஞ்சல் குறியீடு எண், நகரம்
- பயன்பாட்டுத் தரவு
பயன்பாட்டுத் தரவு:
சேவையைப் பயன்படுத்தும் போது, பயன்பாட்டுத் தரவு தானாகவே சேகரிக்கப்படும்.
உங்கள் கருவியின் இணைய நெறிமுறை முகவரி (சான்று IP முகவரி), உலாவி (ப்ரவுசர்) வகை, உலாவி வெளியீடு, நீங்கள் பார்வையிடும் எங்கள் சேவைப் பக்கங்கள், நீங்கள் பார்வையிட்ட நாளும் நேரமும், ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் செலவழித்த நேரம், நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட கருவி, பிற கண்டறியப்பட்ட விவரங்கள் – முதலிய தகவல்களை பயன்பாட்டுத் தரவு உள்ளடக்கியிருக்கலாம்.
நீங்கள் ஒரு கைப்பேசிக் கருவியிலோ அல்லது கணினியிலோ, சேவையை அணுகும் போது, நீங்கள் பயன்படுத்தும் கைப்பேசியின் வகை, உங்கள் கைப்பேசியின் தனிப்பட்ட அடையாளம் ID, கைப்பேசியின் IP முகவரி, உங்கள் கைப்பேசியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் செயலி (இயங்கு தளம்), கைப்பேசிக்கான இணைய உலாவியில் வகை, தனிப்பட்ட கருவியின் அடையாளங்காட்டிகள் மற்றும் பிற கண்டறியும் தகவல்கள் உள்பட, இவ்வளவுதான் என்று கட்டுப்பாடில்லாமல், நாங்கள் தானாகவே சேகரிக்க முடியும்.
நீங்கள் எங்கள் தளத்தைப் பார்வையிடும் நேரத்திலோ அல்லது எங்கள் சேவைகளை அணுகும் நேரத்திலோ அல்லது உங்கள் கைப்பேசிக் கருவி வழியாகவோ, உங்கள் உலாவி அனுப்பும் தகவல்களையும் நாங்கள் சேகரிக்க வாய்ப்புள்ளது.
வெளியார் சமூக ஊடகச் சேவைகள் பற்றிய தகவல்:
பின்வரும் வெளியார் சமூக ஊடகச் சேவைகளின் மூலம், எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு, உங்களுக்கான ஒரு புதிய கணக்கைத் தொடங்கி, நீங்கள் உள்நுழைய வேண்டும்:
- கூகிள்
- ஃபேஸ்புக்
- டிவிட்டர்
வெளியார் (Third-Party) சமூக ஊடகச் சேவை மூலம் எங்களிடம் பதிவு செய்யவோ அல்லது எங்களை அணுகவோ நீங்கள் விரும்பினால், உங்களது வெளியார் சமூக ஊடகச் சேவையில் நீங்கள் பயன்படுத்தி வரும், உங்கள் பெயர், மின்னஞ்சல், உங்கள் தொடர்பு எண், உங்கள் செயல்பாடுகள் அல்லது உங்கள் கணக்குடன் இணைந்துள்ள தொடர்பாளர் பட்டியல் போன்ற தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரித்துப் பயன்படுத்தலாம்.
உங்களது வெளியார் சமூக ஊடகச் சேவைக் கணக்கு மூலம், நிறுவனத்துடன் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படலாம். அத்தகைய தகவல் மற்றும் தனிப்பட்ட தரவைப் பதிவு செய்யும் போதோ அல்லது வேறு விதமாக வழங்க நீங்கள் தேர்வு செய்தாலோ, இந்த தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டு அவற்றைப் பயன்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் மற்றும் சேமித்து வைக்கவும், நிறுவனத்திற்கு நீங்கள் அனுமதி வழங்குகிறீர்கள்.
கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் விரைவிகள் (Cookies):
எங்கள் சேவைக்கான செயல்பாட்டைக் கண்காணிக்கவும், குறிப்பிட்ட தகவலைச் சேமிக்கவும், நாங்கள் நட்புநிரல்களையும் (Cookies), இதைப்போன்ற கண்காணிப்புத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம். தகவலைச் சேகரிக்கவும், கண்காணிக்கவும், பீக்கான்ஸ், டேகுகள் மற்றும் ஸ்கிரிப்டுகள் (beacons, tags, & scripts) போன்ற கண்காணிப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்; இதனால் எங்கள் சேவைகளை பகுப்பாய்வு செய்து, அதற்கேற்ப மேம்படுத்த முடியும். நாங்கள் பின்பற்றும் தொழில்நுட்பங்களில் பின்வருவனவும் உள்ளடங்கும்
விரைவிகள் அல்லது உலாவும் விரைவிகள் (Cookies or Browser Cookies):
விரைவி என்பது, உங்கள் கருவியில் வைக்கப்பட்டுள்ள சிறிய நிரல். அனைத்து விரைவிகளையும் மறுக்கவோ, அல்லது ஒரு விரைவி (குக்கீ) எப்போது அனுப்பப்படுகிறது என்பதைக் குறிப்பிடவோ, உங்கள் உலாவிக்கு நீங்கள் அறிவுறுத்தலாம். இருப்பினும் நீங்கள் விரைவிகளை ஏற்கவில்லை எனில், எங்கள் சேவையின் சில பகுதிகளை நீங்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம். நீங்கள் உங்கள் ப்ரவுசர் செட்டிங்கை சரிப்படுத்தி (adjust) வைக்காததால், விரைவிகளை மறுக்கும் சூழ்நிலை ஏற்படும் போது, எங்கள் சேவையானது விரைவிகளைப் பயன்படுத்தலாம்.
உடனடி விரைவிகள் (Flash Cookies):
- எங்கள் சேவையின் குறிப்பிட்ட பிரிவுகள், உங்கள் விருப்பத் தேர்வுகள் அல்லது எங்கள் சேவையில் உங்கள் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைச் சேகரித்துத் சேமிக்க, உள்ளே சேமிக்கப்பட்ட கருத்துகளை (அல்லது உடனடி விரைவிகளை) பயன்படுத்தலாம். இணைய விரைவிகளால் (வெப் குக்கீஸ்) பயன்படுத்தப்படும் அதே ப்ரவ்சர் செட்டிங்ஸ்களால் இந்த உடனடி விரைவிகள் மேலாண்மை செய்யப்படுவதில்லை. உடனடி விரைவிகளை எப்படி நீக்குவது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, உள்ளே பகிரப்படும் கருத்துகளை நிறுத்துவதற்கு அல்லது நீக்குவதற்கான செட்டிங்குகளை நாம் எங்கே மாற்றுவது – என்பதை, பின்வரும் இணையதளத்தில் படிக்கவும்: https://helpx.adobe.com/flash-player/kb/disable-local-shared-objects-flash.html#main_Where_can_I_change_the_settings_for_disabling__or_deleting_local_shared_objects_
இணைய ஒளிகாட்டிகள் (Web Beacons):
எங்கள் சேவையின் குறிப்பிட்ட பிரிவுகள் மற்றும் எங்கள் மின்னஞ்சல்கள் சிறிய மின்னணு கோப்புகளைக் கொண்டுள்ளன, இவை நிறுவனத்தின் ஒப்புதல் பெற்ற இணைய ஒளிகாட்டிகள் (மேலும் கிளியர் gifs–கள், பிக்சல் tags–கள், மற்றும் சிங்கிள் பிக்சல் gifs–கள்) எனப்படும்; எடுத்துக்காட்டாக, அந்த பக்கங்களைப் பார்வையிட்ட பயனாளர்கள், மின்னஞ்சல் திறந்த அல்லது பிற தொடர்புள்ள இணையதள புள்ளிவிவரங்களுக்கென, மொத்த பயனாளர்களைக் கணக்கிட, நிறுவனத்திற்கு துணைசெய்கிறது (எடுத்துக்காட்டாக பெருமளவில் பார்வையார்களைக் கொண்ட குறிப்பிட்ட பிரிவைப் பதிவுசெய்தல், சிஸ்டம் மற்றும் செர்வர் ஒருங்கிணைப்பைப் பதிவுசெய்தல் போன்றவை)
இந்த விரைவிகள் நிலையான (Persistent) அல்லது தற்காலிக (Session) விரைவிகளாக இருக்கலாம். நிலையான விரைவிகள், நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும் போதும், உங்கள் தனிப்பட்ட கணினி அல்லது கைப்பேசிக் கருவியில் இருக்கும்; ஆனால், தற்காலிக விரைவிகள், உங்கள் இணைய உலாவியை மூடியவுடன் தற்காலிக விரைவிகள் நீக்கப்படும்.
பின்வரும் நோக்கங்களுக்காக, நாங்கள் நிலையான மற்றும் தற்காலிக விரைவிகள் – இரண்டையும் பயன்படுத்துகிறோம்:
தேவையான / இன்றியமையாத விரைவிகள் (குக்கீஸ்)
வகை: தற்காலிக விரைவிகள்
நிர்வாகம்: நாங்கள்
நோக்கம்: இணையதளம் வழியாகக் கிடைக்கும் சேவைகளை உங்களுக்கு வழங்கவும், அதன் சில பகுதிகளைப் நீங்கள் பயன்படுத்தவும் இந்த விரைவிகள் இன்றியமையாதவை. மேலும் சரியான (உரிய) பயனாளர்களை ஏற்றுக்கொண்டு, பயனாளர் கணக்கில் ஏற்படுத்தப்படும் மோசடியான பயன்பாட்டைத் தடுக்கவும் இது துணைபுரிகிறது. இந்த விரைவிகளின் துணை இல்லாமல், உங்களுக்கு வேண்டிய சேவைகளை எங்களால் வழங்க இயலாது. மேலும் நீங்கள் கோரிய சேவைகளை உங்களுக்கு வழங்க மட்டுமே இந்த விரைவிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
விரைவிகளின் நோக்கம் / அறிவிப்பை ஏற்றுக்கொள்ளும் விரைவிகள்
வகை: நிலையான விரைவிகள்
நிர்வாகம்: நாங்கள்
நோக்கம்: இணையதளத்தில் விரைவிகளின் பயன்பாட்டை, பயனாளர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை இந்த விரைவிகள் அடையாளம் கண்டறியும்.
செயல்பாட்டு விரைவிகள் (Functionality Cookies)
- வகை: நிலையான விரைவிகள்
- நிர்வாகம்: நாங்கள்
- நோக்கம்:
நோக்கம்: இந்த விரைவிகள், நீங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் போது, உங்கள் உள்நுழைவு விவரங்கள் அல்லது மொழிவிருப்பம் – முதலிய நீங்கள் செய்யும் தேர்வுகளை நினைவில் வைத்துக்கொள்ள வகை செய்கின்றன. இந்த விரைவிகளின் நோக்கம் உங்களுக்கு தனிப்பட்ட அனுபவற்றை வழங்குவது, மற்றும் ஒவ்வொரு முறை இணையதளத்தைப் பயன்படுத்தும் போது, உங்கள் விருப்பங்களை மீண்டும் மீண்டும் உள்ளிடுவதைத் தவிர்ப்பது.
நாங்கள் பயன்படுத்தும் விரைவிகள் மற்றும் நீங்கள் தேர்வுசெய்யும் விரைவிகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, எங்களின் விரைவிகள் கொள்கை அல்லது எங்களது தனியுரிமைக் கொள்கையின், விரைவிகள் பகுதியைப் பார்வையிடவும்.
உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துதல்:
நிறுவனம், பின்வரும் நோக்கங்களுக்காக ஒருவருடைய தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தலாம்.
- எங்கள் சேவையை வழங்கிப் பராமரித்தல்: எங்கள் சேவையின் பயன்பாட்டைக் கண்காணிப்பது உட்பட, எங்கள் சேவையை வழங்குதல் மற்றும் பராமரித்தலுக்காக பயன்படுத்தலாம்.
- உங்கள் கணக்கை மேலாண்மை செய்தல்: எங்கள் சேவையின் பயன்பாட்டாளராக, நீங்கள் பதிவுசெய்திருந்தால், அதனை மேலாண்மை செய்ய பயன்படுத்தலாம். நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தரவானது, பதிவு செய்யப்பட்ட பயனாளர் என்ற முறையில் உங்களுக்குக் கிடைக்கும் சேவையின் வெவ்வேறு செயல்பாடுகளை எளிதில் அணுகும்படி செய்ய முடியும்.
- ஒப்பந்தத்தின் செயல்திறனுக்காக: சேவையின் மூலம், எங்களிடம் நீங்கள் வாங்கிய தயாரிப்புகள், பொருட்கள் அல்லது வேறு ஏதாவது ஒப்பந்தம் செய்யப்பட்ட இனங்கள் அல்லது சேவைகளுக்கான, கொள்முதல் ஒப்பந்தத்தின், மேம்பாடு, இணக்கம் மற்றும் முயற்சி – ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தலாம்.
- உங்களைத் தொடர்புகொள்ள: மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள், சிற்றஞ்சல் (SMS) அல்லது அதற்கிணையான பிற மின்னணு தகவல் தொடர்புக் கருவிகள் மூலம், உங்களைத் தொடர்பு கொள்ளவோ கைப்பேசிச் செயல்பாடுகளின் புஷ் அறிவிப்புகள்; செயல்பாடுகள், தயாரிப்புகள் அல்லது பாதுகாப்பு மாற்றங்கள் உட்பட, ஒப்பந்தம் செய்யப்பட்ட சேவைகள் தொடர்பான புதுப்பிப்புகள் அல்லது தகவல் தொடர்புகள் – இவை தேவைப்படும் போது அல்லது அவற்றின் செயல்பாட்டுக்குச் சரியானவையாக இருக்கும் போது – இவற்றைப் பயன்படுத்தலாம்.
நாங்கள் உங்களுக்கு வழங்குவதற்கு: நாங்கள் வழங்கும் பிற பொருட்கள், சேவைகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய செய்திகள், சிறப்புச் சலுகைகள் மற்றும் பொதுவான தகவலை உங்களுக்கு வழங்குவதற்கும், நீங்கள் ஏற்கனவே வாங்கிய அல்லது எங்களிடம் கோரிய, தகவல்களைப் பெற – நாங்கள் இவற்றைப் பயன்படுத்தலாம் (குறிப்பு: இத்தகைய தகவலைப் பெற வேண்டாம் என நீங்கள் தேர்வு செய்திருந்தால், எங்களால் பயன்படுத்த முடியாது)
- உங்கள் கோரிக்கைகளை கையாள: உங்கள் கோரிக்கைகளை கவனிக்க மற்றும் கையாள – நாங்கள் பயன்படுத்தலாம்.
- வர்த்தக பரிமாற்றத்திற்காக: நமது உடைமைகளை (our assets) மதிப்பீடு செய்ய அல்லது இணைப்பை ஏற்படுத்த, தனித்தனியாக ஆக்க, மறுகட்டமைக்க, மறுசீரமைக்க, கலைக்க அல்லது இதர விற்பனைக்கு அல்லது சிலவற்றை பகுதியாக அல்லது முழுமையாக பரிமாற்றம் செய்ய – நாங்கள் பயன்படுத்தலாம். மேலும், இது தற்போதைய தொழிற் சிக்கலாக இருந்தாலோ, கடனைத் திருப்ப இயலாவிட்டாலோ, கடனைத் தீர்த்தல் மற்றும் இதுபோன்ற செயல்பாடுகளில், உடைமைகளை மாற்றுதல் தொடர்பாக, எங்கள் சேவையின் பயனாளர்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களும் உள்ளடங்கும்.
- பிற நோக்கங்களுக்காக: தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல், பயன்பாட்டுப் போக்குகளைக் கண்டறிதல், எங்கள் விளம்பரப் பிரச்சாரங்களின் செயல்திறனை முடிவுசெய்தல், எங்கள் சேவை, தயாரிப்புகள், சேவைகள், விற்பனைச் சந்தைப்படுத்தல் மற்றும் உங்கள் அனுபவத்தை மதிப்பீடு செய்து மேம்படுத்துதல் – முதலிய பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம்.