கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் குறை தீர்த்தல்
கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் குறை தீர்த்தல்
கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் (M&E) என்பது பல்வேறு செயல்பாடுகளின் வளர்ச்சி நிலையைக் கண்டறிந்து, உரிய திருத்தங்களை செய்யவும், செயல்திறனை மேம்படுத்தவும், எதிர்நோக்கும் பயன்களை அடையவும், உரிய நேரத்தில், சரியான நடவடிக்கை எடுக்க, திட்ட மேலாளர்களுக்கு கருத்துகளை (feedback) வழங்குவதற்கான ஒரு முதன்மைச் செயல்பாடாகும்.
சுய உதவிக் குழு குடும்பங்களில் இருந்து வரும் மகளிர் தொழில்முனைவோருக்கு, பணியிட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள், தங்கள் குறைகளைப் பதிவுசெய்ய, குறைதீர்க்கும் இணையவாயில் (portal) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையவாயிலில் பதிவு செய்யப்படும் குறைகள், அவர்கள் வாழும் மாவட்ட திட்ட மேலாண்மை அலகின் (DPMU) மூலம் தீர்க்கப்படுகின்றன.