சமுதாயம் சார்ந்த பயிற்சி மற்றும் திறனை வளர்த்தல்

சமுதாயம் சார்ந்த பயிற்சி மற்றும் திறனை வளர்த்தல்

இந்த துணைப் பிரிவு உள்ளூர் தொடர்பான துணைத் தொழில் துறைகளில், திறன் வளர்ப்புப் பயிற்சிக்காக, இலக்குக் குடும்பங்களை எளிதாக அணுக வாய்ப்பளிக்கிறது.

உள்ளூர் வல்லுநர்கள் மற்றும் தொழில்திறன் கொண்டவர்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு, திறன்பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் மூலம், சமுதாயத் திறன் பள்ளிகள் (CSSs) மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் (CFSs) ஆதரவுடன், ஊரக அளவில், மகளிர் மற்றும் பிற விளிம்பு நிலைப் பிரிவினர் அணுகிப் பெறும் வகையில் பயிற்சிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.  

விற்பனைச் சந்தைக்குத் தேவையான உற்பத்திகளைக் கண்டறியவும், பயிற்சிக்குப் பிந்தைய பணியமர்துதல் மற்றும் வேலைவாய்ப்பை எளிதாக்கவும், உள்ளூர் MSMEs –கள் மற்றும் தொழில்முனைவோரை தொடர்பு கொள்ளவும், இந்த துணைப் பிரிவு உதவி செய்கிறது.

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளில் ஈடுபடும் பல உழவர்களின் உற்பத்தித் திறன் சராசரியை விட குறைவாக இருக்கலாம்; மற்றும் அவர்கள் பயிரிடும் நிலப்பரப்பிற்கும், விளைச்சலுக்கும் இடையே, பெருமளவில் இடைவெளி இருக்கலாம்.

இவர்களின் உற்பத்தித் திறனைப் பெருக்க, வேளாண் உற்பத்தியை அதிகரித்து, வேளாண்மை சார்ந்த ஊரக (கிராம) வேலைவாய்ப்பை மேம்படுத்துவது இன்றியமையாதது.

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த – இரண்டு வகை செயல்பாடுகளிலும், புதுமை நுட்பங்களை கையாள வைப்பதற்கு வேண்டிய திறன்களைப் பெற இது தேவைப்படுகிறது.

நெசவு செய்தல், நகைகள் செய்தல், கூடைகள் முடைதல், பானை வனைதல் போன்ற பாரம்பரிய மற்றும் உள்ளூர் (மண்டலம்) சார்ந்த தேவைகளை எதிர்கொள்ளும் திறன் துறைகள் உள்ளன. இத்தகைய திறன்கள், பெயரளவுத் திறன்களாக இல்லாமல், அளவிடக்கூடியதாகவும், வருமானத்தை ஈட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஊரக மக்களிடம் திறன்வளர்ப்பது சவாலாகவே உள்ளது.

சமுதாயத் திறன் பள்ளிகள் (CSS), இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக மகளிருக்கு, முதன்மைப் பயிற்றுநர்கள் மற்றும் சமுதாய வல்லுநர்களைக் கொண்டு, தங்களுடைய கள அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், குறைந்தபட்ச எளிய கருவிகளுடன் (infrastructure) திறன் பயிற்சி வழங்குவதன் மூலமும், வருமான ஆதாரத்தை மேம்படுத்த இன்றியமையாத வாய்ப்புகளை வழங்குகின்றன.


சமுதாயத் திறன் பள்ளி


சமுதாயப் பண்ணைப் பள்ளி