வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் (TNRTP) எனப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது (VKP), உலக வங்கி துணையுடன், 2017 –ல் தொடங்கப்பட்டு, ஊரக மேம்பாட்டுத் துறை மற்றும் ஊராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும். இத்திட்டத்திற்கென உலக வங்கியும், தமிழ்நாடு அரசும் 70 : 30 என்ற பங்களிப்பில், 919.73 கோடி ரூபாய், அதாவது (123.74 டாலர்) ஒதுக்கீடு செய்துள்ளன.
இத்திட்டமானது, தொழில் மேம்பாடு, நிதியுதவியை அணுகும் வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் வழியாக ஊரக சமூகங்களை நிலையாகக் கட்டமைத்து, செல்வவளத்தைப் பெருக்குவதன் மூலம், வறுமை ஒழிப்பையும் தாண்டிய மேம்படுத்தப்பட்ட நுட்பங்களைப் (வழிமுறைகள்) பயன்படுத்தி, ஊரக மாற்றத்தை ஏற்படுத்துவதை தொலைநோக்காகக் கொண்டுள்ளது
திட்ட வளர்ச்சியின் நோக்கம்
ஊரக தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல்
நிதியுதவியை அணுகும் வாய்ப்பை ஏற்படுத்துதல்
தொழில் / வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்