நுண் தொழில் நிறுவன நிதித் திட்டம்

நுண் தொழில் நிறுவன நிதித் திட்டம்

When

June 28, 2023    
12:00 am

Where

சென்னை
சென்னை, சென்னை
Map Unavailable

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28-06-2023) வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பிலான நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.5.60 இலட்சம் ரூபாய் கடனுதவியாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி அவர்கள், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மைச் செயல் அலுவலர் திருமதி. ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *